ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு அதிக பட்ச ஆயுள் 120 வயதுவரை என்று சொல்லப் பட்டுள்ளது. நவகிரகங்களின் ஒன்பது தசைகளையும் ஒருவர் சந்தித்துவிட்டால் 120 வயது ஆயுள் நெருங்குவதாக அர்த்தம். பொது வாக ஜோதிடத்தில் சனி தசை 4-ஆவது தசையாக வும், செவ்வாய் தசை 5-ஆவது தசையாகவும், ஆறாவதாக குரு தசையும், ஏழாவதாக ராகு தசையும் வந்தால் மாரக தசை என்று சொல்லப் பட்டுள்ளது. இவையெல்லாம் நடைமுறை யில் உண்மையா என்றால் ஓரளவு உண்மை தான். ஆனால் ஜாதகத்தை பல்வேறு கோணங் களில் ஆராய்ச்சி செய்தபிறகே ஒரு முடிவுக்கு ஜோதிடர்கள் வரமுடியும்.
மேற்கண்ட தசைகளில் ராசியாதிபதியாக வும், லக்னாதிபதியாகவும் லக்ன யோகர்கள் வந்தால் மேற்கண்ட விதி நடைமுறையில் பெரும்பாலும் பொருந்துவதில்லை. சில பிறந்த குழந்தைகள்கூட முதல் தசை யிலேயே மாரகத்தை சந்திப்பார்கள். ஒருசிலர் இளமை, நடுவயதில், முதிய வயதில் மாரக தசையை சந்திப்பார்கள். இது அவர்களின் பூர்வபுண்ணியத்தைப் பொருத்தது. எத்தனை வயதுவரை ஒருவர் வாழ்வார் என்பதை மட்டும் ஜோதிடர்கள் வெளியே சொல்லக்கூடாது என்பது ஜோதிட விதி. அற்ப ஆயுள், நீண்ட ஆயுள், மத்திம ஆயுள் என்பதை ஜோதிடர் களால் ஓரளவு கணிக்கமுடியும். முழு ரகசியம் ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.
ஆண்டவன் நினைத்தால் அற்ப ஆயுளையும் நீண்ட ஆயுளாக மாற்றமுடியும். இதற்கு உதாரணம் மார்க்கண்டேயன், சத்தியவான்- சாவித்திரி வரலாறு. ஜோதிடத்தில் புலமை பெற்ற சில ஜோதிடர்கள் தன்னுடைய ஆயுளின் ஆண்டு, நாள், நேரம் எவ்வளவு என்ப தைத் துல்லியமாகக் கணித்து விடுவார்கள்.
ராகு 3, 6, 11-ல் இருந்து, அதன் வீட்டதிபதி நன்றாக இருந்தால் ஏழாவது ராகு தசை நன்மையே செய்யும். ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகியவற்றில் இருந்தால், ஏழாவது ராகு தசை நன்மையே செய்யும்.
உதாரணமாக, 2017 நவம்பர் 20-ஆம் தேதியன்று, திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த 102 வயது மூதாட்டி, "நாளை காலை 4.00 மணிக்கு நான் இறக்கப்போகிறேன்' என்று முதல் நாளிலேயே உறவினர்களிடம் கூறிவிட்டார். அதன்படியே அந்த மூதாட்டி மறுநாள் காலை 4.00 மணிக்கு சரியாக இறந்துவிட்டார். இவ்வளவு துல்லியமாக தன்னுடைய ஆயுளைக் கணக்கீடு செய்ததற்குக் காரணம், ஜோதிடத்தில் புலமைபெற்று, தன்னுடைய ஆயுள் எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கணித்துவிட்டார் என்பதே.
ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பதற்கு ஜோதிடத்தில் லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, ஆயுள்காரன் சனி மற்றும் நடப்பு தசை எப்படி உள்ளது என்பதையெல்லாம் கணக்கிட்டுதான் சொல்லமுடியும். சர லக்னமான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 2, 7-க்குடையவர்கள் மாரகாதிபதிகள். ஸ்திர லக்னமான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தில் பிறந்தவர்களுக்கு 8, 11-க்குடையவர்கள் மாரகாதிபதிகள். உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனத் தில் பிறந்தவர்களுக்கு 7, 11-க்குடையவர்கள் மாரகாதிபதிகள் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த தசைகளில் மாரகம் நிகழுமா என்றால், ஜாதகத்தைப் பல்வேறு கோணங்களில் மற்றும் வயதை வைத்து ஆராய்ச்சி செய்தபிறகே சொல்லமுடியும்.
ஏழாவது தசை மாரக தசை என்றால் சிலருக்கு அமையும்; ஒருசிலருக்கு அமையாது. ஏனென்றால் நீண்ட ஆயுளாக இருந்தால் ஏழாவது தசையும் தாண்டி எட்டாவது தசையும் தொடரும். உதாரணமாக காஞ்சி மகாபெரியவர் கிட்டதட்ட 99 வயது, 8 மாதம்வரை வாழ்ந்தார். அவர் ஒன்பது தசைகளையும், ஒன்பது மகாமகமும் கண்ட மகான். அதேபோல் ஒருசிலர் 102 வயது, 119 வயது வாழ்ந்தார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பத்திரிகைகளில் அவ்வப் போது செய்திகள் வருகின்றன.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மறைந்த எஸ்.ஏ.பி. வரதன் என்ற ஜோதிடர் 102 வயதிற்குமேல் வாழ்ந்துள்ளார். இவரைப் பற்றி பலருக்குத் தெரியும்.
எனவே, ஏழாவது தசை மாரக தசை என்பது ஜோதிடத்தில் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. இன்று அறுபது வயது கடக்கும்பொழுது சஷ்டியதப் பூர்த்தி என்கிற 60-ஆவது கல்யாணம், பீமரதசாந்தி என்கிற 70-ஆவது கல்யாணம், சதாபிஷேகம் என்கிற 80-ஆவது கல்யாணம் போன்ற வைபவங்கள் திருக்கடையூரில் காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி திருக்கோவில் நடைபெறுகிறது. இன்று சில குழந்தைகளுக்கு ஒரு வயது முடிந்தவுடன் பெற்றோர்கள் ஆயுஷ் ஹோமம் செய் கிறார்கள். ஹோமம், யாகத்தின்மூலம் ஆயுளை நீடிக்கவைக்க முடியுமா என்றால், ஜாதகர்களுக்கு பிராப்தம் இருந்தால் கண்டிப் பாக ஆயுள் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை. பிராப்தம் இல்லையென்றால் ஆயுள் நீடிக்காது. உதாரணமாக, காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலி தாவுக்கு ஹோமம், யாகம் பல செய்தும் ஆயுள் நீடிக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
எக்காரணத்தைக் கொண்டும் ஒரு மனிதன் துர்மரணம் செய்துகொள்ளக் கூடாது என்று கருடபுராணம் கூறுகிறது. துர்மரணம் அடைந்தவர்கள் இந்த பூமியில் தன் ஆயுள் முடியும்வரை பேயாக அலைய நேரிடும். துர்மரணம் நடந்த வீட்டில் அதற்குரிய திலஹோமம், சேது அல்லது ராமேஸ்வரம் போன்ற தலங்களில் செய்தால் மட்டுமே அவர்களின் ஆன்மா சாந்தியடையும். பரிகாரம் செய்யும்வரை அந்த வீட்டில் முன்னேற்றம் இருக்காது. எனவே ஒரு மனிதன் தன்னம்பிக்கையோடு போராடி, தன்னுடைய ஆயுள் முடியும்வரை வாழ்வதே சிறப்பு. பூர்வபுண்ணியத்தைப் பொருத்து தான் ஏழாவது தசை மாரக தசையா, இல்லையா என்பதை நிர்ணயம் செய்யமுடியும்.
செல்: 98403 69513